தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
சமந்தா நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வது, ஒர்க் அவுட் செய்வது , யோகா செய்வது என பல விஷயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.