தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.
பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது நமீதா Bow Wow என்ற படத்தில் ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மரத்தில் தூக்கி கட்டையபடி அந்தரத்தில் தொங்கி நடித்து வியப்பளித்துள்ளார்.