இணையத்தைக் கலக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:41 IST)
நடிகை சமந்தா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவரை மையக் கதாபாத்திரத்தில் வைத்து தெலுங்கில் ஒரு படம் உருவாகி வருகிறது. தமிழில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் ‘தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடித்து வருவதால் சிறிது காலம் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் ‘ என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவரின் புகைப்படங்கள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் துறவிக் கொண்டை, புல்லாக்கு அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்