வாரத்தின் இறுதி நாளான இன்று கமல் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தது. வனிதா வெளியேற்றப்பட்டதில் இருந்தே நிகழ்ச்சியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இல்லை கவினின் காதல் கதையை வைத்தே காலத்தை ஓட்டிவருகின்றனர். இதனால் மிகுந்த வெறுப்பிற்கு ஆளான மக்கள் புதுவிதமான டாஸ்க்களை கொடுங்கள் என கேட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில், மீராவுக்கு ஏதோ ஒரு மனக்கசப்பு இருக்கிறது என மீரா மிதுனிடம் கமல் கேட்கிறார். பின்னர் மீரா கவின் நினைப்பதை போன்று மற்றவர்களும் நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூற கவின் என்ன நினைக்கிறார் என யாருக்கு தெரியும் என செம்ம கலாய் கலாய்க்க அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது.
இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய சாக்ஷியை நீங்கள் பேசாதீங்க, மற்றவர்கள் பேசட்டும் என கமல் சாக்ஷியை தடுத்து நிறுத்துகிறார். மேலும் சாக்ஷிக்கு ஒரு குறும்படம் போட்டு காட்டவேண்டுமென சேரன் சொல்ல மக்களும் அதையே கேட்கின்றனர். எனவே இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.