வருமான வரி தொடர்பான வழக்கு… எஸ் ஜே சூர்யா மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சனி, 28 மே 2022 (15:47 IST)
நடிகர் மற்றும் எஸ் ஜே சூர்யா மீது வருமான வரித்துறை சார்பில் 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர். மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் வருமான வரித்தாக்குதல் செய்யவில்லை என்று அவர் மேல் 6 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விசாரணையின் போது வருமான வரிக்கணக்குக்கான  மறுமதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜே. சூர்யா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் பலமுறை வருமான வரித்துறை கணக்கை தாக்கல் செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பியும் எஸ் ஜே சூர்யா அதை செய்யவில்லை என்று கூறி அவரின் மனுக்களை நிராகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்