இன்று வெளியான விஷாலின் ‘லத்தி’ : டுவிட்டரில் நெகட்டிவ் விமர்சனம்!

வியாழன், 22 டிசம்பர் 2022 (11:45 IST)
இன்று வெளியான விஷாலின் ‘லத்தி’ : டுவிட்டரில் நெகட்டிவ் விமர்சனம்!
விஷால் நடித்த ‘லத்தி’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட 4 மொழிகளில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு டுவிடட்ர் பயனாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
 இன்று அதிகாலை ‘லத்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தை பார்த்த பலரும் படம் படு மோசமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மட்டுமே திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் திரைக்கதை மிகவும் மோசமாக இருப்பதாகவும் படத்தில் புதிதாக ஒன்றுமே இல்லை என்றும் மனதை கவரும் வகையில் எந்த ஒரு காட்சியும் இல்லை என்றும் இயக்குனருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
ஆனால் அதே நேரத்தில் விஷால் ரிஸ்க் எடுத்து உயிரை கொடுத்து நடித்துள்ளார் என்பதும் அவரது உழைப்பை இயக்குனர் வீணாக்கி உள்ளார் என்றும் டிவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்