விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி!

புதன், 16 ஜூன் 2021 (09:30 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் தொடங்க உள்ளதாம்.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் படப்பிடிப்புக்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் தெலங்கானா மாநில அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டு ராஜமௌலி கோரிக்கை வைத்துள்ளாராம். அதன் படி இப்போது ஆந்திராவில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அனுமதி கிடைக்க உள்ளதற்கான வாய்ப்புகள் தெரியவே, மீண்டும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விரைவாக முடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்