தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.
கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இந்தப்படத்தின் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு இயக்குனர் ராஜமௌலி ’ப்ளக்ஸ் வைக்காதீர்கள்… நோட்டீஸ் ஒட்டாதீர்கள்… வீட்டில் இருங்கள்… பாதுகாப்பாக இருங்கள்… ஆன்லைனில் இருங்கள்… த்ரில்லை உணருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.