பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 மெஹா ஹிட்களுக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றிய கதையை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் , ராம்சரண் தேஜாவும் கதாநாயகனாக நடித்து வருகின்றனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்து வருகிறார்.
ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் சில தனிப்பட்ட காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்குப் பதில் நடிக்க போகும் நடிகை யார் என்பதை அறிவிக்காமல் இருந்தது படக்குழு. இந்நிலையில் நேற்ற்ய் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் ஓலிவா மோரீஸ் என்ற இங்கிலாந்து நாடக நடிகர் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.