டிக்கெட் வாங்க விஜய் பெயரை தவறாகப் பயன்படுத்திய நபர்கள் – நள்ளிரவில் வந்த அழைப்பு!

வியாழன், 9 ஜூலை 2020 (12:18 IST)
நடிகர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி சிலர் சர்கார் படத்துக்கு டிக்கெட் வாங்க முயன்றதை பற்றி ரோகினி திரையரங்கின் உரிமையாளர் பேசியுள்ளார்.

சமீபகாலமாக நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் மிகப்பெரிய சாதனையை செய்து வருகின்றன. அதனால் அனைத்து திரையரங்கங்களும் விஜய் படத்தை திரையிட மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. இந்நிலையில் நடிகர் விஜய்யின் நண்பரும், சென்னையின் முக்கியமான திரையரங்குகளில் ஒன்றாக விளங்கும் ரோகின் திரையரங்கத்தின் உரிமையாளருமான ரேவந்த் சரண் விஜய்யுடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘நாங்கள் எப்போதும் தொழில் ரீதியாக அதிகமாக பேசிக்கொள்ள மாட்டோம். விஜய் என்னை ஒரு சகோதரனைப் போலவே நடத்துவார். சர்கார் திரைப்பட வெளியீட்டின் போது சிலர் விஜய் பெயரை பயன்படுத்தி டிக்கெட் கேட்டனர். இந்த விஷயம் அறிந்த விஜய் நள்ளிரவு 2 மணிக்கு எனக்கு அழைத்து என் பெயரை சொல்லி டிக்கெட் கேட்ட ஒருவருக்கும் டிக்கெட் கொடுக்காதீர்கள்’ எனக் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்