பொம்பள ‘தல’: யாரை அப்படி சொன்னார் ரோபோ சங்கர்?

புதன், 19 டிசம்பர் 2018 (08:56 IST)
மாரி 2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரோபோ சங்கர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில்  நடித்திருக்கின்றனர்.
 
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே மாரி 2 படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக மாரி-2, வரும் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ரோபோ சங்கர், மாரி 2 வில் செம ஜாலியாக ஒர்க் பண்ணேன். தனுஷ் சார் வேர லெவல். தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என காட்டிக்கொள்ளவே மாட்டார். அடுத்ததாக சாய்பல்லவி, கிழிகிழின்னு கிழிச்சுட்டாங்க அவுங்க. மாரி 2 மூலம் சாய் பல்லவியின் வேறு ஒரு முகத்தை பார்க்கப் போகிறோம். 
 
அதுனாலயே அவரின் பெயரை பொம்பள தல என டைட்டில் கார்டிலேயே போடச் சொல்லிட்டோம். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை. இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகும் என ரோபோ பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்