சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டை ஷூட்டிங்குக்காக வாடகைக்கு வாங்கிய வனிதா, ஆக்கிரமித்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மகள் வனிதா மீது விஜயகுமார் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் விஜயகுமார், அருண் விஜய், மற்றும் சகோதரியின் தங்கை ஹரி ஆகியோர் மீது வனிதா பரபரப்பு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் வானிதாவும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும் சேர்ந்து வாழ்வதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், கூறப்ட்டது. ஆனால் ராபார்ட் தனது மனைவியை இதுவரை விவகாரத்து செய்யவில்லை.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வரும் செய்திகள் பொய் என்றும் இதை கேட்டு மனவேதனை அடைந்திருப்பதாகவும் ராபர்ட் கூறியுள்ளார்.