போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகருக்கு தொடர்பு ?

சனி, 16 செப்டம்பர் 2023 (12:51 IST)
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் நவ்தீப்புக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் பிரபல  நடிகர்  நவ்தீப். இவர் தமிழில் ஆர்யாவுடன் அறிந்தும் அறியாமலும், அஜித்துடன் ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில், போதைப் பொருள் விவகாரம் தெலுங்கு சினிமா உலகில்பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நைஜீரிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப்  போதைப் பொருள் விவகாரத்தில்  நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து நடிகர் நவ்தீப், எனக்கும் போதைப்பொருள் வழக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நான் ஐதராபாத்தில் தான் உள்ளேன். உண்மையான தகவலை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்