வெளிநாட்டில் தயாராகும் வீர சிவாஜி பாடல்

புதன், 25 மே 2016 (15:13 IST)
விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் வீர சிவாஜி பாடல் ஒன்றை ரஷ்யாவில் படமாக்குகின்றனர்.


 

 
கணேஷ் விநாயக் இயக்கத்தில் வீர சிவாஜி படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரித்து வருகிறது. ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, வினோதினி உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். 
 
சமீபத்தில் இந்தப் படத்துக்காக இமான் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடினார். தாறுமாறு தக்காளி சோறு என ஆரம்பிக்கும் அந்தப் பாடலை ரஷ்யாவின் ஜார்ஜியா மாகாணத்தில் படமாக்குகின்றனர். அடுத்த மாதம் இப்பாடலை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
 
படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதால் அடுத்த மாதம் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்