கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் முதல் பாகம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.