தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்துள்ள புஷ்பா 2, வாரிசு ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. சமீபமாக சில இந்தி படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
தற்போது ராஷ்மிகா நடித்துள்ள இந்தி படமான மிஷன் மஞ்சு விரைவில் வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, தென்னிந்திய படங்களில் காதல் ரொமான்ஸ் பாடல் என்றாலே குத்து பாட்டி, ஐட்டம் சாங் போல இருக்கும். இந்த படத்தில் எனக்கு நல்ல ரொமான்ஸ் பாடல் அமைந்துள்ளது என பேசியுள்ளார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவை சிறுமைப்படுத்தி பேசி வருவதாக ராஷ்மிகா மீது தென்னிந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.