இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அன்பானவர்களே… நான் கொஞ்சம் தாமதமாகதான் சொல்கிறேன் என்று எனக்கு தெரியும். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு எல்லோரின் வாழ்த்துகளுக்கும் பதிலனுப்பினேன். யாருக்காவது நான் பதில் சொல்லவில்லை என்றால் கோபப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் என்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றினீர்கள். உங்கள் வாழ்த்துகளால் நான் காதுவரைக்கும் சிரித்து மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவர் மீதும் நான் அன்பு வைத்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் அணைப்பை அனுப்புகிறேன் எனக் கூறியுள்ளார்.