நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக ராணா உள்ளது. காரணம் அந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரே ஒரு நாள் மட்டுமே ரஜினிகாந்த் கலந்துகொண்ட நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆறு மாதங்களுக்கு சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடந்தது.
இதையடுத்து அவர் உடல்நலம் தேறிய பின்னர் ராணா படத்தில் நடிக்கவில்லை. அந்த படத்தின் மற்றொரு கதையான கோச்சடையான் படத்தில் நடித்தார். ஆனாலும் பின்னர் ராணா படம் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் ராணா படத்தின் கதை மிகவும் அருமையான கதை என்றும் அதில் எந்த ஹீரோ நடித்தாலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பல நேர்காணல்களில் சொல்லியுள்ளார்.