இதையடுத்து ராம்சரண், தற்போது உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் பெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்தினவேல் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் அளித்துள்ள ஒரு நேர்காணலில் இந்த படத்துக்காக புழக்கத்தில் இல்லாத பிலிம் கேமரா மூலம் சிலக் காட்சிகளை ஷூட் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் முக்கியமான சில காட்சிகளை மட்டும் பில்ம் கேமராவில் படம்பிடிக்கவுள்ளனர். அதற்காக ஈஸ்ட்மேன் கோடக் கம்பெனியுடன் இணைந்துள்ளனர். இந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பில்ம் கேமராக்கள் வழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.