“சாமானியன் படத்தை தயாரிப்பாளர் கொன்றுவிட்டார்… எனக்கு சம்பளமும் தரவில்லை” – ராமராஜன் ஆதங்கம்!

vinoth

வியாழன், 13 ஜூன் 2024 (07:10 IST)
80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். ஆனால் அவரின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்ற வேகத்திலேயே கீழே இறங்கியது. ஆனாலும் அவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்தார்.

கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த மேதை படத்துக்குப் பிறகு தற்போது சாமான்யன் படத்தில் நடித்து அந்த படம் மே 23 ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இதுவரை படம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்ச ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இந்த பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் படம் ஓடாததற்கு படத்தின் தயாரிப்பாளர்தான் காரணம் என்று ராமராஜன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவரது நேர்காணலில் “நாங்கள் படத்தை எடுத்துக் கொடுத்துவிட்டோம். அதற்கு விளம்பரம் செய்தால்தானே மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் படத்துக்கு விளம்பரமே செய்யாமல் படத்தைக் கொன்றுவிட்டார். எனக்கும் சம்பள பாக்கியும் கொடுக்கவில்லை.” என ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்