‘பாகுபலி’ மூன்றாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்!!

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (20:32 IST)
ஒருவேளை ‘பாகுபலி’யின் மூன்றாம் பாகம் உருவானால், அதில் நடிக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.


 
 
தமிழில் ‘புத்தகம்’ மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத்சிங், கெளதம் கார்த்திக் ஜோடியாக ‘என்னமோ ஏதோ’ படத்திலும் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் சரியாகப் போகாததால், தெலுங்கில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். கவர்ச்சியையும் தாராளமாக வாரி வழங்க, தற்போது அங்கு முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார்.
 
தன்னைக் கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவைத் தன் பக்கம் வரவைப்பேன் என சபதம் எடுத்தாரோ, என்னவோ… தற்போது வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’, மகேஷ் பாபு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படங்களில் நடித்துள்ளவர், சூர்யா ஜோடியாக செல்வராகவன் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
 
தெலுங்கில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் ராணாவும், ரெஜினாவும் தானாம். ‘பாகுபலி’ மூன்றாம் பாகம் எடுத்தால் நடிக்க விரும்புபவர், ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டரில் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்