காஜலுக்குப் போட்டியாக நடிக்கும் ரகுல் ப்ரீத்சிங்!!

புதன், 14 ஜூன் 2017 (17:44 IST)
‘ஸ்பைடர்’ படத்தில், மருத்துவராக நடித்துள்ளாராம் ரகுல் ப்ரீத்சிங்.


 
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது இந்தப் படம். 
 
இன்னும் 10 நாட்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிய இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ரகுல் ப்ரீத்சிங், இந்தப் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கிறார். 
 
கதைப்படி, மருத்துவராக நடித்துள்ளாராம் ரகுல். வழக்கம்போல மகேஷ் பாபுவைக் காதலிக்கும் வேடம் என்றாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ரகுலுக்கு பெரும்பங்கு இருக்கிறதாம். அட்லீ இயக்கிவரும் ‘விஜய் 61’ படத்தில், காஜல் அகர்வால் மருத்துவராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்