ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு வெளியான வேதாளம் தெலுங்கு ரீமேக் டீசர்!

திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
அஜித்தின் வேதாளம் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது.

தல அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘ வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தூங்காவனம் என்ற படத்துடன் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. அஜித் நடித்த வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் இணையத்தில் நேற்று வெளியானது. லட்சுமி மேனன் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்