மறுமலர்ச்சி 2 வில் கதாநாயகனாக ராஜ்கிரண்!

புதன், 27 அக்டோபர் 2021 (09:58 IST)
1998 ஆம் ஆண்டு மம்மூட்டி மற்றும் தேவயாணி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மறுமலர்ச்சி.

காலம்காலமாக தமிழ் சினிமாவில் சாதியை தூக்கிப் பிடிக்கும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 90 களில் வெளியான ஒரு திரைப்படம்தான் மறுமலர்ச்சி. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஆகா ஓகோவென புகழ்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அதுவும் ஒன்று. அந்த படத்தில் தமிழ்நடிகர்கள் யாரும் நடிக்க சம்மதிக்கவில்லை என்பதால் மலையாள நடிகரான மம்மூட்டியை வைத்து எடுத்தார் இயக்குனர் பாரதி.

ஆனால் அதன் பின் அவர் என்ன ஆனார் என்று யாருக்குமே தெரியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மறுமலர்ச்சி படத்தின் பார்ட் 2 எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான பணிகளில் இயக்குனர் தங்கர் பச்சானும் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த பாகத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது மம்மூட்டி இல்லையாம். அவருக்கு பதில் ராஜ்கிரண் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்