70 வயதில் கபடி விளையாடும் ராஜ்கிரண்… கவனம் ஈர்த்த பட்டத்து அரசன் டிரைலர்!

சனி, 19 நவம்பர் 2022 (09:54 IST)
நடிகர் அதர்வா நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று பட்டத்து அரசன். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் பட்டத்து அரசன். களவாணி என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை எடுத்த சற்குணம் தற்போது பட்டத்து அரசன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சண்டிவீரன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான வரவேற்பைப் பெற்றது.

பட்டத்து அரசன் படத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரண் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கபடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ராஜ்கிரண் அதர்வாவின் தாத்தாவாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்