விஜய்யின் அரசியல் வருகை.. ஒரே ஒரு வார்த்தை சொன்ன ரஜினிகாந்த்..!

Mahendran

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (14:05 IST)
கடந்த சில நாட்களாக ஆந்திராவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பிய நிலையில் அவர் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஒரே ஒரு வார்த்தை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் நடிகர் விஜய் ஆரம்பித்த நிலையில் அவருக்கு பல்வேறு திரை உலக பரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதில் கலந்து கொண்டிருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து விஜய்யின் அரசியல் கட்சி குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ’வாழ்த்துக்கள்’ என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார். 
 
இதனை அடுத்து விஜய்யின் அரசியல் கட்சிக்கு ரஜினியின் ஆதரவு உண்டு என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்