நாடக நடிகராக ரஜினி… வைரலாகும் மாஸான புகைப்படம்!

வியாழன், 3 மார்ச் 2022 (13:19 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது ஆரம்ப கால நாட்களில் மேடை நாடகம் ஒன்றில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக 40 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார்.  தனது 70 வயதிலும் ஆடல் பாடல் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் இன்னமும் கதாநாயகனாக நடித்துவருகிறார். அடுத்து நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கர்நாடகாவில் நடந்த மேடை நாடகம் ஒன்றில் அவர் நடித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தில் இன்று வைரல் ஆகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்