500 டான்ஸர்களோடு ஆடும் ரஜினி… வேட்டையன் படத்தில் மாஸ் பாடல்!

vinoth

செவ்வாய், 23 ஜூலை 2024 (09:25 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மாஸான ஒரு பாடலை வைத்துள்ளாராம் இயக்குனர் ஞானவேல். அந்த பாடலில் ரஜினியோடு சேர்ந்து சுமார் 500 டான்ஸர்களைப் பயன்படுத்தியுள்ளாராம். இந்த பாடல் படத்தின் பேசுபொருள்களில் ஒன்றாக அமையும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்