'லியோ’ படம் வெற்றி பெறுமா? ரஜினிகாந்த் பேட்டி..!

திங்கள், 16 அக்டோபர் 2023 (13:01 IST)
தளபதி விஜய் நடித்த 'லியோ’ திரைப்படம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’தலைவர் 170 ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  நெல்லையில் நடந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 
 
இதற்காக தூத்துக்குடி வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லியோ திரைப்படம் வெற்றி அடைய தனது வாழ்த்துக்கள் என்றும் அந்த படம் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் 46 வருடங்கள் கழித்து இந்த பகுதிக்கு வருகிறேன் என்றும் கடந்த 1977 ஆம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற திரைப்படத்திற்காக இங்கு வந்தேன் என்றும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும் தெரிவித்தார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்