தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம தொடர்பாக பத்திரிக்கையாளர் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் போராட்டத்தில் சமுகவிரோதிகள் புகுந்து விட்டனர் என கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ரஜினியின் கருத்து குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக சொல்லி வலியுறுத்தியது. அனால் கொரோனா அச்சம் காரணமாக ரஜினிகாந்த் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை.