ஜெயிலர் ஆடியோ வெளியீட்டில் விஜய் கலந்துகொள்கிறாரா?
சனி, 10 ஜூன் 2023 (13:33 IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் மற்றும் த செ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக உள்ளார்.
இதில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன், சிவராஜ் குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
விரைவில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய்யைக் கலந்துகொள்ள வைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் கலந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.