ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் த செ ஞானவேல் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக ரஜினிகாந்த் திருவனந்தபுரம் கிளம்பி சென்றுள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.