மும்பையில் இன்று நடைபெற்ற வேவ்ஸ் எனும் உலகளாவிய பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய் குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:
“இந்தியா தற்போது உலக சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இது நம் பிரதமர் மோடிக்கு பெருமை தரும் விஷயம். பலர் இந்த நிகழ்வு அரசியல் காரணங்களால் ஒத்திவைக்கப்படலாம் என்று நினைத்தனர். ஆனால் பிரதமர் மோடியின் வலிமையான தீர்மானம் காரணமாக இந்த நிகழ்வு திட்டமிட்டபடியே நடைபெற முடிந்தது.”
பெஹல்காம் தாக்குதல் கொடூரமும், மனித உணர்வே இல்லாத ஒரு செயலும் ஆகும். இது நம்மை பாதிப்பதோடு மட்டுமல்ல, நாட்டையே பதற வைத்திருக்கிறது. பயங்கரவாதம் மனிதர்களுக்கே எதிரியானது. இது போலியான போராட்டம். அதை ஒழிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவார் என எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.”