ஷூட்டிங்கை முடித்த ரஜினிகாந்த்… வேட்டையன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth

சனி, 11 மே 2024 (13:58 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் தனக்கான காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்துவிட்டாராம் ரஜினிகாந்த். இன்னும் சில நாட்களில் படத்தில் மற்றவர்கள் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்