தமிழ் சினிமாவில் 20 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துவந்தார். பின்னர் சூர்யாவைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், நடிப்பதைக் குறைத்துவிட்டார்.
தற்போதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில், பாகுபலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் தற்போது ஜோதியா நடிக்கும் படங்களுக்கு குறிவைத்து வருவதாகத் தெரிகிறது. அதாவது, பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தி உருவாகவுள்ள சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது, ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.