அண்ணாத்த படத்தில் ரஜினிக்குப் போட்டியான வில்லன் நடிகர்..வீடியோ வைரல்

திங்கள், 26 ஏப்ரல் 2021 (17:59 IST)
ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் இப்படத்தின் வில்லன் நடிகர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இப்போது சென்னையில் சில நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தேர்தலில் வாக்களித்த பின்னர் ரஜினிகாந்த் ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டாராம். அங்குள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மே 10 ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவரின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் முறுக்கு மீசையுடன் இளமையான தோற்றத்தில் ரஜினி காணப்படுகிறார்.இதைப்பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மேலும் ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டும் விதமாக இப்படத்தின் வில்லன் நடிகர் ஜெகபதிபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில்,ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பில் ஒரு பயங்கரமான தோற்றத்தில் வர முயற்சிக்கிறேன். அந்த தோற்றம் அரவிந்தாசமீதாவின் பாசிரெட்டி கெட்டப்பை தோற்கடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்..

இதனால் மேலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படம் 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaggu Bhai (@iamjaggubhai_)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்