இன்று மாலை வெளியாகிறதா ரஜினி நெல்சன் படத்தின் அறிவிப்பு!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:11 IST)
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்குப் பிறகு நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கிய நெல்சன் அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். அதன்பின்னர் அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படம் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது டாக்டர் மற்றும் பீஸ்ட் என உச்சநடிகர்களை இயக்கி முன்னணி இயக்குனராகியுள்ளார்.

இந்நிலையில் அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினி அடுத்து நடிக்கப்போகும் படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் நெல்சனின் பெயரும் உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ரஜினி கூட நெல்சன் இயக்கத்தில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் பணிகளுக்கு இடையே ரஜினி படத்துக்கான கதையை நெல்சன் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அதை ரஜினியிடம் சொல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இன்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. அது கண்டிப்பாக ரஜினி நெல்சன் இணையும் படத்தின் அறிவிப்புதான் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்