ரஜினி படங்கள் மட்டும் பிடிக்கும்... உதயநிதி ஸ்டாலின்

சனி, 1 பிப்ரவரி 2020 (21:09 IST)
ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டும் பிடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிஸ்கின் இயகத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன்  ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. இத்திரைப்படம்  நல்ல வரவேற்பு  பெற்றுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் படக்குழுவினரின் சார்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும், சென்னை சாலிகிராமத்தில், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் மிஸ்கின், நித்யா மேனன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது பேசிய உயதநிதி ஸ்டாலின், இளையராஜாவால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. படத்தில் 3 பாடல்களுக்கு சிறப்பாக இசயமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.மேலும் தனக்கு ரஜினிகாந்த் நடித்ஹ்ட படங்கள் மட்டும் பிடிக்கும் என கூறினார்.
 
சமீபத்தில் , ரஜினி பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருஹ்து தெரிவித்ததற்கு ரஜினியை அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்