ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

சனி, 28 ஜனவரி 2023 (16:31 IST)
ஜெயிலர் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில்  ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரலில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதால் இந்தப் படம் இப்போது ஆகஸ்ட் 15 விடுமுறைக்கு தள்ளிவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்