தன்னுடைய குட் பேட் அக்லி படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு படம் மற்ற நாட்களில் கார் பந்தயம் என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். அதில் சமீபத்தில் தமிழகத்தின் ரேஸர் நரேன் கார்த்திகேயனும் இணைந்தார். தொடர்ந்து துபாய், ஜெர்மனி போன்ற நாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் அணி அடுத்து ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டது.