அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்: ரசிகர்கள் குஷி

புதன், 28 ஜூலை 2021 (21:20 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
இந்த நிலையில் தனது பகுதியில் டப்பிங் பணியை ரஜினிகாந்த் ஆரம்பித்து விட்டதாகவும் மயிலாப்பூரில் உள்ள டப்பிங் தியேட்டரில் அவர் டப்பிங் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் மூன்றே நாட்களுக்குள் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணியை முடித்து விடுவார் என்றும் அதன் பிறகு அடுத்த பட அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது 
 
ரஜினியின் அடுத்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
முன்னதாக இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்திருந்ததாகவும் ஆனால் படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 200 கோடி என்று முடிவானதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது ரஜினிகாந்த் ஜோடியாக இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்