ரஜினியின் 2.0: எடிட்டிங் முடிந்தது, 2 பேர் படமும் பார்த்தாச்சு
புதன், 14 ஜூன் 2017 (22:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய பணியான எடிட்டிங் பணி தற்போது முழுமையாக முடிந்துவிட்டது. இதில் கிராபிக்ஸ் காட்சிகளை மட்டும் இணைக்கும் பணி மட்டுமே பெண்டிங் உள்ளது.
இந்த நிலையில் எடிட்டிங் முடிந்த ரஃப் காப்பி எனப்படும் பின்னணி இசை இல்லாத இந்த படத்தின் காப்பியை நேற்று இயக்குனர் ஷங்கரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் பார்த்ததாக கூறப்படுகிறது. இருவருக்குமே படம் நன்றாக வந்துள்ளது குறித்து பெரும் திருப்தி என்றும், பின்னணி இசை கோர்த்துவிட்டால் படத்தின் லெவலே வேறு என்றும் கூறினர்.
இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைப்பணியை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன், அதில் ஹூசைன், சுதான்ஷூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது.