இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் மோகன் லால், மீனா, நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் த்ரிஷ்யம். இப்படம் வசூல் சாதனை புடைத்தது. அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தின் வெற்றியை அடுத்து, இப்படத்தில் 2 ஆம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
கொரோனா காலத்தில் அரசு விதித்த சில தளர்வுகளுடன் வேகமாக வளர்ந்துவந்த இப்படத்தின் ஷூட்டிங் அனைத்து நடிகர்களின் பங்களிப்பில் இனியே முடிவுற்று இன்று நேற்று ஒடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில், ஏற்கனவே இப்படத்தின் தெலுங்கு ஷுட்டிங் நடைபெற்று வரும் நிலையில், கன்னடத்தில் இப்படத்தை சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஏற்கனவே இப்படம் திரிஷ்யா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயகர், ஆஷா சரத் ,பிரபு, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தி்ற்கு இளையராக இசையமைத்தார்.