ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்த முடிவு !! அரசியலுக்கு வருவாரா ரஜினி??
வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:06 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்து ரசிகர்களும் ஒன்றிணைந்து ரஜியை அரசியலுக்கு அழைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து சென்னை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே அவர் தான் அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவரது இந்த மனமாற்றத்திற்கு உடல்நிலை காரணமாக இருந்தாலும், அவரது நெருங்கிய நண்பர்களான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு மற்றும் சிரஞ்சீவி இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டி அவரது தீவிர ரசிகர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன் நின்று குரல் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ரஜினியின் நிலைப்பாட்டை எதிர்த்து, வரும் 10-01-21 அன்று நடைபெறும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனதகவல் வெளியானது.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நம் மக்கள் தலைவரின் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.21 ஆம் தேதி அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட பகுதி பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையானகாவலர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது மீறி கலந்து கொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை மறுநாள் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூறி ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்காக அனைத்து மாவட்ட ரசிகர்களும் கா மற்றும் பஸ்ஸில் சென்னை வரவுள்ளதாக தெரிகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.