திமுக கூட்டணிக்காக ரஜினியிடம் ஆதரவு கேட்போம்: முத்தரசன்

செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:16 IST)
திமுக கூட்டணி சார்பில் நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டார். இதனை அடுத்து அவரின் ஆதரவைப் பெறுவதற்காக பல கட்சிகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன
 
ஏற்கனவே ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என தேர்தல் பிரச்சாரத்தின்போது ஓப்பன் ஆகவே கமல்ஹாசன் தெரிவித்தார் என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் அவரே நேரில் ரஜினியை சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 14ஆம் தேதி சென்னை வரவிருக்கும் நிலையில் அவர் பாஜகவுக்காக வாய்ஸ் கொடுக்குமாறு ரஜினியிடம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுக கூட்டணி சார்பில் நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
பல கட்சிகள் ஒரே நேரத்தில் ரஜினியிடம் ஆதரவு கேட்கும் நிலையில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்