‘மெர்சல்’ டீஸரை வெளியிடும் ராஜமெளலி

சனி, 30 செப்டம்பர் 2017 (15:26 IST)
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டீஸரை இன்று வெளியிடுகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி.
 


 

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீஸர், கடந்த 21ஆம் தேதி ரிலீஸானது.

இதன் தெலுங்கு டீஸரை, ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இன்று வெளியிடுகிறார். “மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படம் இது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் என இரண்டு லெஜண்ட்களின் 25வது வருடம். சிறந்த காம்பினேஷனில் உருவாகியுள்ள சிறந்த படம். நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும்” எனத் தெரிவித்துள்ளார் ராஜமெளலி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்