படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.
இந்நிலையில் தற்போது ஒடிசாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள அம்மாநில துணை முதல்வர் ப்ரவதி பரிதா “எங்கள் மாநிலத்துக்குப் படப்பிடிப்புக்காக வந்துள்ள ராஜமௌலி, மகேஷ்பாபு, பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை வரவேற்கிறோம்” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த படத்தில் பிரித்விராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது.