அமெரிக்காவின் நியூயார்க்கில் ராஜமௌலிக்குக் கிடைந்த அங்கீகாரம்!

ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (07:44 IST)
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம். இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான போட்டி பிரிவில் போட்டியிடுகிறது.

இதற்காக ராஜமௌலி அமெரிக்காவில் தனது முந்தைய படங்களை எல்லாம் திரையிட்டு காட்டி வருகிறார். இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்காக சிறந்த படத்துக்கான இயக்குனர் நியுயார்க் விமர்சகர்கள் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆர் ஆர் ஆர் படத்தை ஹாலிவுட் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்