கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் படு்தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாருமே தேர்தலில் கட்சித் தோல்விக்குப் பொறுப்பேற்காத நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடித்தார். இதற்கு 5 மாநில முதல்வர்கள் நேரில் சென்று ராகுலை சமாதானப்படுத்த முயன்றனர். பலவேறு மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி, சோனியா காந்தியை தலைவராக தொடருமாறு கூறினர். ஆனால் அவர் தற்காலிகத் தலைவராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சோனியாவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.