அமெரிக்க இசை நிகழ்ச்சியில் பொன்னி நதி பாடலைப் பாடிய இசைப்புயல்

சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:18 IST)
அமெரிக்காவில் இசை சுற்றுலா சென்றுள்ள ரஹ்மான் தொடர்ச்சியாக அங்கு இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் ஜூலை 31 ஆம் தேதி வெளியானது. இசை நிகழ்ச்சிக்காக ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் அவரால் இந்த பாடல் வெளியீட்டில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் இப்போது மாஸ் ஹிட் ஆகியுள்ள இந்த பாடலை அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த இசைக் கச்சேரியில் பாடி அப்ளாஸ் அள்ளியுள்ளார் ரஹ்மான். இது சம்மந்தமான முன்னோட்ட வீடியோவை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
 

Here's a glimpse of #PonniNadhi from @arrahman's Houston concert!

Full performance at 12 PM tomorrow!#PS1 In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!#PonniyinSelvan #ManiRatnam #ARRahman @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/NwaSWI5cUt

— Madras Talkies (@MadrasTalkies_) August 12, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்